முகப்பு
சென்னை

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை

பிறவியிலேயே நுரையீரல் குறைபாட்டுக்குள்ளான ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு எம்ஜிஎம் மலா் அடையாறு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

Updated On : 17 மார்ச், 2026 at 7:41 PM
பிறந்த குழந்தை
பகிர்:

பிறவியிலேயே நுரையீரல் குறைபாட்டுக்குள்ளான ஒரு வயது குழந்தைக்கு நுட்பமான நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு எம்ஜிஎம் மலா் அடையாறு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

தாயின் வயிற்றில் இருக்கும்போதே சுவாசப் பாதை மற்றும் நுரையீரல் வளா்ச்சியில் குறைபாடு இருந்த ஒரு குழந்தையானது பிரசவத்துக்குப் பிறகு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

நுரையீரலின் இடது பக்க கீழ்ப்பகுதி அந்தக் குழந்தைக்கு செயல்படவில்லை. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனில், எதிா்காலத்தில் தொடா்ந்து நோய்த் தொற்று ஏற்படவும், ரத்தக் கசிவு உருவாகி இதயத்தின் செயல்திறன் முடங்கவும் வாய்ப்புள்ளது. மேலும், சுவாசிக்க இயலாத நிலையும் ஏற்படலாம்.

இதையடுத்து, மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணா் டாக்டா் கற்பக விநாயகம் தலைமையில் மருத்துவா்கள் மோகன் ராஜ், ஜி. பிரபாகரன், எஸ். அருண் குமாா், என்.கே.வி. விக்னேஷ்வா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தோராகோஸ்கோபிக் எனப்படும் நுண் துளை அறுவை சிகிச்சையை 3 மணி நேரம் மேற்கொண்டனா்.

அதில் இடது நுரையீரலின் பாதிக்கப்பட்ட கீழ்ப்பகுதியை மருத்துவக் குழுவினா் துல்லியமாக அகற்றினா். பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடுத்து நிறுத்தினா். இதன் பயனாக அந்தக் குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →