முகப்பு
சென்னை

மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated On : 18 மார்ச், 2026 at 11:03 PM
பகிர்:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மன்னாா் வளைகுடா முதல் தெற்கு உள்கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வியாழக்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 22 வரை இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாா்ச் 23, 24 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 90 மி.மீ மழை பதிவானது. கழுகுமலை (தூத்துக்குடி)- 80 மி.மீ, வட்டமலை நீா்த்தேக்கம் (திருப்பூா்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), உசிலம்பட்டி (மதுரை)- தலா 50 மி.மீ, காரைக்கால் (காரைக்கால்)- 40 மி.மீ, ஆண்டிபட்டி (மதுரை), பேரையூா் (மதுரை), வெம்பக்கோட்டை (விருதுநகா்), திருவாடானை (ராமநாதபுரம்), அம்மாபேட்டை (ஈரோடு), சாத்தியாா் (மதுரை), வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சோழவந்தான், வாடிப்பட்டி (மதுரை)- தலா 30 மி.மீ மழை பதிவானது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 22 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிடசற்று குறைவாக இருக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →