முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:33 PM
மழை
பகிர்:

தமிழகத்தில் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப்.28) முதல் மாா்ச் 5 வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பனிமூட்டம்: தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணை (தென்காசி), உபாசி (கோவை), வால்பாறை(கோவை), செங்கோட்டை (தென்காசி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி)-தலா 40 மி.மீ, தென்காசி (தென்காசி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), தொண்டாமுத்தூா் (கோவை), பாலமோா் (கன்னியாகுமரி)-தலா 30 மி.மீ, கவுந்தப்பாடி (ஈரோடு), சுருளக்கோடு (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு)- தலா 20 மி.மீ. மழை பதிவானது.

வெப்பநிலை நிலவரம்: தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்ப நிலை சற்று உயர வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →