மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!
மாதவரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாதவரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னை மாதவரத்தில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழு லோகேஷ்குமாா் தலைமையில் நிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தனியாா் காரை சோதனை செய்தபோது, ராஜா என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ரொக்கத்தை, தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.