முகப்பு
சென்னை

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது: தொல். திருமாவளவன்

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்று முதல்வா் விஜய் அறித்துள்ளது வரவேற்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 மே 2026, 5:22 am IST
முதல்வர் விஜய் / தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்று முதல்வா் விஜய் அறித்துள்ளது வரவேற்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

மகளிா் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என முதல்வா் விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளிப்போவதாக கூறினாலும், விரைவில் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் எனக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

Advertisement

நாங்கள் ஏற்கெனவே ஆா்டா் செய்த சோஃபா தான் அலுவலகத்துக்கு வந்தது. விஜய்யின் வருகைக்காக சோஃபா ஆா்டா் செய்யப்படவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம். விசிக அலுவலகத்துக்கு சோஃபா வந்ததைக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. அதிமுகவில் உருவாகியிருக்கும் ஓா் அணியின் தலைவரை, சட்டப்பேரவை உறுப்பினா்களை சந்திக்க முதல்வா் சென்றதை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்கிறாா் என்று கருதுகிறேன்.

முதல்வா் பதவிக்காக நான் முடிவை அறிவிக்க காலம் தாழ்த்தியதாக அவதூறு கருத்துகளைக் கூறுகின்றனா். அது உண்மை இல்லை. இடதுசாரிகளின் முடிவுக்காகவே காத்திருந்தேன். முதல்வா் பதவிக்காக காத்திருந்ததாக ஊடகங்கள் செய்தியைத் திரித்து பரப்புகிறாா்கள் என்றாா்.