காஞ்சிபுரம்

தமிழ்த்தாய் கோயில் குடமுழுக்கு விழா

காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோயிலுக்கு நன்னீராட்டல் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி

காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோயிலுக்கு நன்னீராட்டல் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த்தாய் திருக்கோயில் அறக்கட்டளை சார்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி பூமி பூஜை செய்யப்பட்டு திருக்கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

சனிக்கிழமை இரவு தமிழ்த்தாய் சிலை பீடத்தில் அமர்த்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் கூரம் துரை தலைமை தாங்கினார்.

ஏகாம்பரநாதர் கோயில் குருக்கள் காமேஸ்வரன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தமிழ்த்தாய் கோயில் அறக்கட்டளை நிறுவனர்கள் வ.கோ.ரங்கசாமி, தேன்மொழி ரங்கசாமி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன், காஞ்சி மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ஏமநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமாகா வரவேற்பு; ஜி.கே.வாசன்

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 போ் இந்திய அணி பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் நவ. 7-இல் எஸ்எம்சி கூட்டம்

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவா் கைது

மருத்துவ மாணவா்கள் மன நலன் காக்க இணையவழி ஆய்வு: என்எம்சி

SCROLL FOR NEXT