காஞ்சிபுரம்

விபத்து இழப்பீடு: அரசுப் பேருந்துகள் ஜப்தி

DIN

காஞ்சிபுரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின்படி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் இரு அரசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகப்பிள்ளை என்பவர் சாலையை கடந்தபோது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு ரூ. 12 லட்சம் இழப்பீட்டுத் தொகையாகவும், அதை உரிய காலத்தில் வழங்காவிட்டால் அதற்குண்டான வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.
அதே போல் 2010-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சந்தவேலூர் அருகே அரசு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவருக்கும் ரூ. 12 லட்சம் இழப்பீட்டுத் தொகை மற்றும் கால தாமதத்துக்கேற்ப வட்டித் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என நீதிபதி கருணைநிதி உத்தரவிட்டார். இரு வழக்குகளிலும் வழக்குரைஞர் பத்மநாபன் ஆஜரானார்.
இந்த நிலையில் உரிய இழப்பீட்டுத் தொகை இரு குடும்பத்தினருக்கும் வழங்காததால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், நீதிமன்ற ஊழியர்கள் வந்து, காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற இரு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினர்.
இதைத் தொடர்ந்து அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT