காஞ்சிபுரம்

5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

DIN

தமிழக பள்ளிக் கல்வித் துறை, ஈஷா பசுமைக் கரங்கள், சுற்றுச்சூழல் தேசிய பசுமைப் படையினர் ஒருங்கிணைந்து மதுராந்தகம் வட்டாரத்தில் 47 பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பயிற்சி மற்றும் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினர்.
மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடபெருமாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை வைதேகி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஈஷா பசுமைக்கரங்கள் திட்ட அமைப்பாளர் சுவாமி ரபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.பாதாம், பூவரசு, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி நாட்டுநலத் திட்ட அலுவலர் டி.குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT