காஞ்சிபுரம்

கூர்நோக்கு இல்லத்தில் கைகலப்பு: 6 பேர் காயம்

DIN

செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதில் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்தனர்.
 சமூக நலத் துறையினரால் இளம் குற்றவாளிகளைத் தங்க வைக்கும் கூர்நோக்கு இல்லம் செங்கல்பட்டில் உள்ளது. இந்த இல்லத்தில் கண்காணிப்பாளர், ஆசிரியர்கள், மேலாளர்கள், பாதுகாவலர்கள் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்த இல்லத்தில் 77 மாணவர்கள் உள்ளனர்.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள 6 மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு மோதலாகி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதைப் பார்த்த ஆசிரியர் வெள்ளியங்கிரி மாணவர்களைத் தடுக்க முயன்றார். அப்போது அந்த மாணவர்கள், வெள்ளியங்கிரியையும் தாக்கியுள்ளனர்.
 இதையடுத்து காயமடைந்த 6 மாணவர்களும், ஆசிரியர் வெள்ளியங்கிரியும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT