காஞ்சிபுரம்

முடிச்சூர் சாலையில் மழைநீர் வடிகால்களை அகலப்படுத்த வேண்டும்: அமைச்சர் உத்தரவு

DIN


2 காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மழைநீர் வடிகால்களை அகலப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன்
வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2 வாரங்களாகப் பெய்த வடகிழக்கு பருவமழையை அடுத்து பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள், நாராயணபுரம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கும், மீண்டும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம் கோட்டம், முடிச்சூர் சாலை, கிருஷ்ணா நகர், வரதராஜபுரம், பாரதிநகர், மகாலட்சுமி நகர், பரத்வாஜ் நகர், பி.டி.சி நகர் ஆகிய பகுதிகளில் உயர்கல்வித் துறை அமைச்சர்கே.பி.அன்பழகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்து, வெள்ளம் வடிவதைப் பார்வையிட்டார். மழைநீர் வடிந்துள்ள முடிச்சூர் சாலை , கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்களைப் பார்வையிட்ட அமைச்சர், அந்த வடிகால்களை மேலும் அகலப்படுத்துவது குறித்து வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, குறுகலாக உள்ள வடிகால்களில் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 
அதுபோல், குறுகலாக உள்ள வடிகால்களை மேலும் அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இனிவரும் காலங்களில் இந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயக்குமார், வருவாய் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT