காஞ்சிபுரம்

அஞ்சல் முகவர் பணிக்கு நவ.15- இல் நேர்காணல்

தினமணி

வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று நேரடியாக அஞ்சல் சேகரிக்கும் முகவர் பணிக்கு நவம்பர் 15-ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி கூறியதாவது: நேரடியாகச் சென்று பதிவு, விரைவு, பார்சல்கள் ஆகியவற்றைப் பெற்று, உரிய இடத்தில் டெலிவரி செய்யும் பணிக்கு, காஞ்சிபுரத்தில் செயல்படும் அனைத்து அஞ்சலகங்களுக்கும் முகவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 இந்தப் பணிக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கணினி பயன்படுத்தும் திறன், நவீன செல்லிடப்பேசி வைத்திருத்தல், கணினி அல்லது மடிக்கணினியுடன் இணையதள வசதி வைத்திருத்தல் அவசியமானது. இந்த முகவர் திட்டத்தில், அஞ்சலகம் ஒன்றுக்கு ஒரு முகவர் (தனிநபர் மட்டும்) வீதம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 முகவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தபால்களை பெற்று டெலிவரி செய்வதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் அதிக தபால்களுக்கு ஏற்ப கமிஷன் (தொகுப்புத் தொகை) அடிப்படையில் முகவர்களுக்கு பணம் வழங்கப்படும். இந்த முகவர் பணிக்காக எந்தவொரு முன்பணமும் அஞ்சலகத்துக்கு செலுத்த வேண்டியதில்லை.
 இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள், காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில்வே சாலை, காஞ்சிபுரம் 631501 எனும் முகவரில், வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் (அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில்) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
 அன்றைய தினமே இந்த முகவர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT