காஞ்சிபுரம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக் கோரி 18,000 பேர் மனு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யக்கோரி இதுவரை 18 ஆயிரம் பேர் மனுக்கள் அளித்துள்ளதாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில்மேஷ ராம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4,005 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 2018-ஆம் ஆண்டுக்கான 11 சட்டப்பேரவைத் தொகுதி வரைவு வாக்காளர்கள் பட்டியல் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களைச் சேர்க்கவும், நீக்கம், திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய்க் கோட்ட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன்மூலம், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மனுக்கள் பெறப்படுகின்றன. இதற்காக, அக்டோபர் 8, 22-ஆம் ஆகிய தேதிகளில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 
இந்த, முகாம்களை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில திட்டக்குழு உறுப்பினர், செயலர் அனில் மேஷ ராம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நேரடியாக பார்வையிட்டார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்கள் இதுவரை 18 ஆயிரத்து 48 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து54 ஆயிரத்து 276, பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 96 ஆயிரத்து 603, திருநங்கைகள் 351 ஆக உள்ளனர். 
இதுவரை பெறப்பட்டுள்ள மனுக்கள் விவரம்: 
சோழிங்கநல்லூர்-2457, ஆலந்தூர்-1932, ஸ்ரீபெரும்புதூர் (தனி)-2234, பல்லாவரம்-2039, செங்கல்பட்டு-1764, திருப்போரூர்-1564, செய்யூர் (தனி) -1050, மதுராந்தகம் (தனி) -816, உத்தரமேரூர்- 1383, காஞ்சிபுரம்- 1473 என மொத்தம் 18 ஆயிரத்து 48 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றார். 
ஆட்சியர் பா.பொன்னையா கூறுகையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பாக நடைபெற, அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மேலும், அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது, வாக்காளர் பதிவு அலுவலர் ஜி.ராஜு, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் என்.ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT