காஞ்சிபுரம்

ஆதிதிராவிடர் வழக்குரைஞர்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி

DIN

ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த இளம் சட்ட பட்டதாரிகளுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவியை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம், ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த இளம் சட்ட பட்டதாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 
இதன்மூலம், இளம் வழக்குரைஞர்கள் தொழில் தொடங்க அலுவலக வாடகை முன்பணம், அறைகலன்களான மேஜை, நாற்காலி, அலமாரி, சட்டப் புத்தகங்கள் வாங்குவதற்கு நிதி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 இளம் வழக்குரைஞர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். அப்போது, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சக்திவேல், மாவட்ட ஆதி திராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT