முகப்பு
காஞ்சிபுரம்

முழு அடைப்பு: துண்டுப் பிரசுரம் வழங்கிய பாமகவினர்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அக்கட்சியினர் படப்பை பஜார் பகுதியில் வணிகர்களிடம் துண்டுப் பிரசுரங்களை

Updated On : 10 ஏப்ரல், 2018 at 2:54 AM
முழு அடைப்புக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் வழங்கும் பாமகவினர்.
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அக்கட்சியினர் படப்பை பஜார் பகுதியில் வணிகர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். 
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், அதை அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது. 
இந்நிலையில், அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, வன்னியர் சங்கத்தின் குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் வைப்பூர் ரமேஷ் தலைமையில் பாமக தொண்டர்கள் படப்பை பஜார் பகுதியில் உள்ள வணிகர்களிடம் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் ஜெயகாந்தன், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் தேவேந்திரன், பாஸ்கர சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.