காஞ்சிபுரம்

மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பழங்குடியினர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் பி.சண்முகம், மாநில செயலர் சரவணன், மாவட்ட செயலர் அழகேசன், விவசாய சங்க மாவட்ட செயலர் கே.நேரு உள்ளிட்டோர் 
சிறப்புரை ஆற்றினர். 
ஆர்ப்பாட்டத்தின்போது, பழங்குடியினர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழங்குடி இருளர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மனைப்பட்டா வழங்குதல், ஏரிக்கரை, குளக்கரை, வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் இருளர் மக்களுக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா வழங்குதல், அனைவருக்கும் வீடு, பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டித்தருதல், 15 நாள்களில் ஜாதிச்சான்று வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் இருளர் மக்களுக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு வழங்குதல், நரிக்குறவர், வேட்டைக்காரர், குறவர் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் மோகனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT