முகப்பு
காஞ்சிபுரம்

'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர் பேரவை ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி பாதுகாப்புக்கான மாணவர் பேரவையின் கூட்டமைப்புகளின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

காஞ்சிபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி பாதுகாப்புக்கான மாணவர் பேரவையின் கூட்டமைப்புகளின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் அபுசாலி தலைமை வகித்தார். பல்வேறு கட்சிகளின் மாணவர் பேரவை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
இதில், நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்தில், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், முஸ்லிம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவர் பேரவையினர் கலந்து கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →