காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தினமணி

புத்தாண்டையொட்டி மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரம் ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.
 சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழும் மாமல்லபுரத்தில், நட்சத்திர உணவகங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து மின்விளக்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரவு 12 மணிக்கு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர்.
 திங்கள்கிழமை பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா இடமான கடற்கரை, கடற்கரைக் கோயில், அர்சுனன்தபசு, ஐந்துரதம், பழைய கலங்கரை விளக்கம், புதிய கலங்கரை விளக்கம், புலிக்குகை, வெண்ணெய் உருண்டை பாறை, வராக மண்டபம் என காணும் இடங்களில் எல்லாம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. பலர் புகைப்படங்களும், கைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.
 காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜு தலைமையில், சரஞ்சீவி, ரமேஷ் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீஸார், ஆயுதப்படை போலீஸார், கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் என 500}க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT