காஞ்சிபுரம்

ஒரத்தூரில் "அம்மா' திட்ட முகாம்

DIN

குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில்  "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
முகாமிற்கு தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் கற்பகம் சுந்தர், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சுந்தர், வனக் குழுத் தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், ஒரத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த 22 பேருக்கு வழங்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், 7 பேர் இலவச வீட்டுமனை பட்டா கோரியும், 13 பேர் முதியோர் உதவித் தொகை கோரியும் மனுகள் வழங்கினர். 
படப்பை வருவாய் ஆய்வாளர் அரி,  கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், டில்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT