மாநில திறன் மாநாடு: தனித் திறன் தகுதியுடையோருக்கு அழைப்பு
தனித்திறன் தகுதியுடையோர் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில திறன் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்மாநில திறன் மாநாடு: தனித் திறன் தகுதியுடையோருக்கு அழைப்பு
தனித்திறன் தகுதியுடையோர் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில திறன் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
தனித்திறன் தகுதியுடையோர் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில திறன் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மாநில திறன் மாநாடு வரும் 9,10 ஆகிய 2 நாள்களுக்கு கிண்டி ஏ.டி.ஐ.-யில் (Advanced Training Institute) நடைபெறவுள்ளது. தொழிலாலர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் திறன் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இதனை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை அலுவலர்கள், பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட குழு மதிப்பீடு செய்யவுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளன.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் திறன் சூழல்-திறன் முனைப்புகள், வாய்ப்புகள், உலக அளவிலான திறன் பயிற்சி - நடைமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் துறை வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன. இந்த மாநாட்டைத் தொடர்ந்து, வரும் 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் தனித்திறன் தேடும் நிகழ்வு (Individual Skills Hunt) நடைபெறும்.
இந்த நிகழ்வு, கிண்டி, அம்பத்தூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், கிண்டி ஏடிஐ நிறுவனம் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுடையோர், 1997, ஜனவரி 1ஆம் தேதி, அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், தகுதியான நபர்கள் ww.tnskillshunt.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதில், ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள், தனித் திறன் தேடலில் நேரடியாகப் பங்கேற்கலாம்.
மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படுவோர் வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்களுக்கு நடைபெறும் மண்டல அளவிலான திறன் போட்டியிலும், ஜூலை மாதம் தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான திறன் போட்டியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறலாம்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் வெளியிட்டது.