காஞ்சிபுரம்

ஏடிஎம் மோசடி: மூதாட்டியிடம் பணம் திருடிய இளைஞர் கைது 

DIN

மூதாட்டியை ஏமாற்றி ஏடிஎம் ரகசியக் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி பணம் திருடிய இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
உத்தரமேரூரை அடுத்த கல்லமாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி(60). அவர் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் வெள்ளிக்கிழமை பணம் எடுக்க சென்றார். அப்போது, அங்கு இளைஞர் ஒருவர் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் அட்டையை வாங்கினார். பின்பு, ரகசிய எண்ணைத் தட்டிய பின்பு, மூதாட்டியிடம் வங்கி இருப்பில் பணம் இல்லை எனக்கூறி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார். 
அந்த இளைஞர் கூறியதை நம்பி மூதாட்டியும் ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். தொடர்ந்து, அந்த மர்ம நபர் மூதாட்டியின் வங்கி ஏடிஎம்மின் ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் எடுத்து, தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, மூதாட்டியின் செல்லிடப்பேசிக்கு ரூ.10 ஆயிரம் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு வந்தது. இதை அருகில் இருப்பவர்களிடம் கேட்டறிந்த மூதாட்டி திடுக்கிட்டார். பின்பு, இந்த விவரத்தை தனது உறவினரிடம் தெரிவித்தார். அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். 
அதன்பேரில், உத்தரமேரூர் போலீஸார் அந்த ஏடிஎம் மையத்துக்கு விரைந்து வந்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மூதாட்டியை ஏமாற்றிய வாலிபரின் படத்தை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திணையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT