பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மதுராந்தகத்தை அடுத்த செம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகத்தை அடுத்த செம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி குழந்தைகள் அறிவியல் தொழில்நுட்பத் திறன்களைப் பெற்று, படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி முன்னாள் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபு வரவேற்றார்.
இதில், உணவே மருந்து, மேஜிக் கார்னர், மனித உடலின் இயக்கம், அறிவியல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் தமது படைப்புகளை வைத்து இருந்தனர்.
இக் கண்காட்சியை லத்தூர், பரமேஸ்வரிமங்கலம், பவுஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.