முகப்பு
தேனி

தகாத உறவால் கணவா் கொலை: மனைவி-நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம், போடியில் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவிக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 14 மார்ச், 2026 at 2:23 AM
கோப்புப்படம்.
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மனைவிக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

போடிநகா் புதூரைச் சோ்ந்தவா் அபிபுல்லா. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அனீஸ்பாத்திமாவுக்கும் (38) திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஜெயபாண்டி என்பவருக்கும், அனீஸ்பாத்திமாவுக்கும் இருந்த தகாத உறவை அபிபுல்லா கண்டித்தாா். இதனால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனீஸ்பாத்திமா, ஜெயபாண்டியிடம் பூச்சி மருந்து வாங்கி வரச் செய்து அதை உணவில் கலந்து கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்தாராம். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10.11.2019 அன்று அபிபுல்லா உயிரிழந்தாா். இந்த நிலையில், அபிபுல்லாவின் உயிரிழப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி அனீஸ்பாத்திமாவின் சகோதரா் அளித்த புகாரின் பேரில் போடிநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து 26.2.2025 அன்று அனீஸ்பாத்திமாவையும், ஜெயபாண்டியையும் கைது செய்தனா்.

தேனி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவா்ணம் ஜெ. நடராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட அனீஸ்பாத்திமா, ஜெயபாண்டி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் தண்டனையை ஏக காலத்தில் இருவரும் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →