கல்லூரியில் ஆண்டு விழா
மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்
மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் காசிநாதபாண்டியன், ஆலோசகர் ரவிச்சந்திரன், டீன் சுப்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை இந்திய விளையாட்டு மேம்பாட்டு கழக இயக்குநர் ஆர்.நடராஜன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 35 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், 67 மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும், 17 பேருக்கு வெண்கலப் பதக்கங்களும், துறை வாரியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முரளி நன்றி கூறினார்.