விபத்தில் இளைஞர் சாவு
மறைமலைநகரை அடுத்த திருத்தேரி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது மொபெட் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
மறைமலைநகரை அடுத்த திருத்தேரி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது மொபெட் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிங்கபெருமாள் கோயிலை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் நந்தா (41). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி(28). இருவரும் புதன்கிழமை மொபெட்டில் சென்றனர். நந்தா வாகனத்தை ஓட்டிச் சென்றார். சிங்கபெருமாள் கோயிலை அடுத்த திருத்தேரி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.