காஞ்சிபுரம்

டெங்கு கள ஆய்வு: அரிசி ஆலைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

DIN

டெங்கு ஆய்வில் அரிசி ஆலைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் டெங்கு கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடை, குடியிருப்பு, அலுவலகங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, ஆட்சியர் பா.பொன்னையா காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட காஞ்சிபுரம் நகராட்சிக்குபட்ட பாலிமர்மேடு, தாயார்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் டெங்கு கொசுப் புழுக்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விதிகளை மீறி அரிசி ஆலை கழிவுநீர்த் தொட்டி மற்றும் கால்வாயில் டெங்கு கொசுப் புழுக்களைக் கண்டறிந்தார். அதோடு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து "இதுபோன்று கொசுப்புழுக்கள் மீண்டும் உற்பத்தி ஆகாத வகையில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என ஆலை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது, சுகாதாரத்துறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT