காஞ்சிபுரம்

சமூக விரோதச் செயல்களுக்கு உள்ளாகும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

DIN


மதுராந்தகத்தை அடுத்த பழமத்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் சிறிய அளவில் உள்ளதால் இரவு நேரத்தில் அதற்குள் நுழைந்து பள்ளி வளாகத்துக்குள் வரும் சிலர் அங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பழமத்தூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 137 மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமையில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளிக் கட்டடத்துக்கான சுற்றுச்சுவர் குறைந்த உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. பள்ளி செயல்படாத நாள்களிலும், இரவு நேரத்திலும், பள்ளி வளாகம் பூட்டப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து மது அருந்துவது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
பள்ளி திறக்கப்படும் நாள்களில் கழிவுகளை அகற்றி, அப்பகுதியை சுத்தம் செய்த பின்பே காலை நேரத்தில் மாணவர்களை வகுப்புகளுக்குள் ஆசிரியர்கள் அனுமதித்து வருகின்றனர். இது பற்றி பல முறை மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பழமத்தூர் கிராமத்தில் தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தி கடந்த 13-ஆம் தேதியன்று மக்கள் குறை கேட்பு முகாமை நடத்தினார். அப்போது பள்ளி நிர்வாகத்தினரும், மாணவர்களின் பெற்றோர்களும் நடுநிலைப் பள்ளி சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகப்படுத்தி, யாரும் எந்த நேரத்திலும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை எழுப்பினர். 
அதற்கு, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்து மூலமாக கோரிக்கை மனு அளித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ உறுதி அளித்தார். பள்ளிக் குழந்தைகளின் நலனையும், பள்ளிக் கட்டடத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT