காஞ்சிபுரம்

பள்ளியில் கொலு கண்காட்சி

தினமணி

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி பள்ளி ஆசிரியைகளால் அமைக்கப்பட்ட கொலுக் கண்காட்சியை பள்ளிக் குழந்தைகள் பார்வையிட்டனர்.
 விவேகானந்தா பள்ளிக் குழுமங்களின் சார்பாக இயங்கி வரும் பள்ளிகளின் சார்பாக, விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சுவாமி பொம்மைகள், ஆன்மிக நூல்கள், இயற்கை வளத்தைக் காட்சிப்படுத்தும் பொம்மைகள், உலக உருண்டையை வலம் வரும் கால்நடைகள், பல்வகைப் பறவைகள், பல்வேறு பொம்மைகளின் விளையாட்டுகள் உள்ளிட்டவை அழகாக காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன.
 இந்தக் கொலு கண்காட்சியை பள்ளியின் தாளாளர் டி.லோகராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வரும் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை கொலு கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு சுண்டல், இனிப்பு வகைகள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திலகவதி தலைமையில் பள்ளி ஆசிரியைகள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT