முகப்பு
காஞ்சிபுரம்

அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய

Updated On : 23 அக்டோபர், 2018 at 3:15 AM
பகிர்:


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதியாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 வயது; பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 வயது; பிற பிரிவினருக்கு 30 வயது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு. 
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31-10-2018.
இத்தகவலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.