25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளைப் பராமரிக்க விண்ணப்பிக்கலாம்
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள வீடுகளை பழுதுநீக்க முனைவோர் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள வீடுகளை பழுதுநீக்க முனைவோர் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள வீடுகள் பழுதடைந்துள்ளன. இந்த வீடுகளைப் பராமரிப்பு செய்து தரக்கோரி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் மனுக்கள் அளித்துள்ளனர். அதன்பேரில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டபடி, பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை ஒரு வீட்டுக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் பழுதுபார்க்க அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, இந்த மாவட்டத்தின் ஊரகப்பகுதியில் உள்ள பொதுமக்கள், அரசுத் திட்டத்தின் கீழ், கடந்த 1993-94ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு கட்டபட்டு, பழுதடைந்துள் வீடுகளைப் பராமரிப்புக்கும் பணிகள் செய்யப்படவுள்ளன. இதற்காக, தகுதியுடையோர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பழுது பார்க்க இயலாத நிலையிலுள்ள வீடுகளை இத்திட்டத்தின் கீழ் பழுது பார்க்க இயலாது. அதன்படி, இத்திட்டத்தில், பழுதடைந்த வீட்டில் தளம் சரிசெய்தல், ஒழுகும் நிலையில் உள்ள வீடுகளில் மேல் தளத்தில் ஓடுகள் பொருத்துதல், பூச்சு வேலைகள், சுவர் விரிசல்களை சரிசெய்தல், தரை அமைத்தல், பழுதடைந்த கதவு, ஜன்னல்கள் பொருத்தும் பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன என்று ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.