காஞ்சிபுரம்

மாமல்லபுரம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தினமணி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை மாமல்லபுரம் கடற்கரைக்கு கொண்டு வந்து கரைக்கப்பட்டன.
 மாமல்லபுரம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பாக காவல்துறை சார்பில் பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
 இந்நிலையில் காவல்துறை அனுமதியின்படி சிலைகளைக் கரைப்பதற்கு முதல் கட்டமாக மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்
 கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கை மற்றும் ஆரவாரத்துடன் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.
 பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள் ஆர்வத்துடன் கடலில் இறங்கி, பூஜைகள் செய்து சிலைகளை கடலில் கரைத்தனர்.
 மல்லிகேஸ்வரர் கோயிலில் விநாயகர் பூஜை
 செங்கல்பட்டு, செப். 15: மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் 2ஆம் நாள் மாலையில் சிறப்பு பூஜைகளும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன.
 மாமல்லபுரம் பஜனைக் கோயில் தெருவில் உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலில் பிரணவ கணபதி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவின் 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு பூஜைகளும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன. சிறப்பு பூஜையையொட்டி மூலவரான பிரணவ கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
 இரவில் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பிரபையுடன் கூடிய புஷ்ப அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
 பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பவனி வர, மேளதாளம், வாண வேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.
 விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT