காஞ்சிபுரம்

கீரப்பாக்கம் கிராமத்தினர் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

DIN


கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 
கீரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக சாலை வசதி, பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்றும், இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் கிராமத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 
அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அதிருப்தி அடைந்த மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த, வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, சரவணன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கீரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் கிராம மக்களிடம் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT