காஞ்சிபுரம்

செங்கல்பட்டில் அதிமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரம்

திருப்போரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகமும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலும் திருப்போரூர் தொகுதியில் இறுதிக் கட்டமாக

DIN

திருப்போரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகமும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலும் திருப்போரூர் தொகுதியில் இறுதிக் கட்டமாக செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 அவர்களுக்காக திருப்போரூர் மட்டுமின்றி இந்த ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் அதிமுகவினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தண்டரை கே.மனோகரன், பா.தனபால், மாவட்டநிர்வாகிகள் ஆனூர் பக்தவத்சலம், வேலாயுதம், எஸ்வந்த் ராவ், ஒன்றியச் செயலாளர்கள் திருக்கழுகுன்றம் விஜயரங்கன், தையூர் குமரவேல், நாவலூர் முத்து, ரகு, பாமக நிர்வாகிகள் காரணை ராதாகிருஷ்ணன், கணேசமூர்த்தி, பி.வி.கே.வாசு, பாஜக மாவட்டத் தலைவர் சிவசெந்தமிழரசு, ஸ்ரீதர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர்.
 காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு செங்கல்பட்டில் அக்கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விநாயகம், நெல்லை ராதா, அன்வர்பாய், அரிகிருஷ்ணன், சண்முகசுந்தரம், சங்கரலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். தேமுதிக நிர்வாகிகள் ரவி, அலாவுதீன், பாஜகவின் ராஜேந்திரன், யோகேந்திரநாயுடு உள்ளிட்ட ஏராளாமான கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் நகம் முழுவதும் சென்று அதிமுக, பாஜக அரசுகளின் சாதனைகளைக் கூறி பிரசாரம் செய்தனர்.
 இதேபோல் மறைமலைநகரில் அதிமுக நகரச் செயலாளர் ரவிக்குமார், எம்.ஜி.கே.கோபிக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் அந்தந்த பகுதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT