காஞ்சிபுரம்

பாமக வேட்பாளரை ஆதரித்து லோக் ஜனசக்தியினர் பிரசாரம்

DIN

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக படப்பை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லோக் ஜன சக்தி கட்சி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஐனசக்தி கட்சி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக படப்பை, சிறுமாத்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, துண்டுப் பிரசுரம் வழங்கி, மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
 இதில், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் க.மாறன், செயலர் வி.பிரகாஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சி.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT