காஞ்சிபுரம்

செங்கல்பட்டில் 108 அவசர ஊர்தி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

DIN


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களைக் கண்டித்து 108 அவசர ஊர்தி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இருந்து நோயாளிகளைக் கொண்டு செல்லும் பணியில் 108 அவசர ஊர்தி மற்றும் தனியார் அவசர ஊர்தி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் விவகாரத்தில் இந்த அவசர ஊர்தி உரிமையாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.  இதனிடையே, சென்னைக்கு ஒரு நோயாளியைக் கொண்டு செல்வதில் 108 அவசர ஊர்தி ஊழியர் விஜிப்பிரியா என்ற பெண் ஊழியருக்கும், தனியார் அவசர ஊர்தி உரிமையாளர் பாலு என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பாலு,  பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசியதாகக்  கூறப்படுகிறது. 
இதனால் ஆவேசமடைந்த மற்ற 108 அவசர ஊர்தி ஊழியர்கள் தனியார் அவசர ஊர்தி உரிமையாளரைக் கண்டித்து திங்கள்கிழமை மாலையில் வேலைநிறுத்தத்திலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் மறியல் போராட்டத்திலும்  ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் செல்ல முடியாமலும் வெளியே வர முடியாமலும் பாதிக்கப்பட்டனர். 
தகவல் அறிந்து செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட போலீஸார் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அவசர ஊர்தி ஊழியர் பாலு தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்தார். இதையடுத்து அவசர ஊர்தி ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை திங்கள்கிழமை இரவே கைவிட்டு கலைந்து சென்றனர். 
மேலும்  தனியார் அவசர ஊர்தி உரிமையாளர்களை இனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கக்கூடாது  என வலியுறுத்தி 108 அவசர ஊர்தி ஊழியர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம்  மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT