காஞ்சிபுரம்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

DIN


மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள  தலசயனப்பெருமாள்கோயிலில் பவித்ர உற்சவத்தையொட்டி 108 கலச பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 
108 வைணவத் தலங்களில் 63-ஆவது வைணவத் திருத்தலமாக விளங்கக்கூடிய  மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை பவித்ர உற்சவத்தையொட்டி 108 கலசபூஜை நடைபெற்றது. 
இதனையடுத்து உற்வச மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, நிலமங்கைத் தாயார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் பன்னீர் அபிஷேகங்கள் நடைபெற்றன. 
பின்னர், புனித நீரைக்கொண்டு கலசாபிஷேகம் நடைபெற்றது. பவித்ர உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், பட்டாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT