காஞ்சிபுரம்

ரேஷன் கடை கட்டடத்தை திறக்கக் கோரிக்கை

DIN


காந்தூர் மேட்டுக்காலனி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், காந்தூர் ஊராட்சியில் உள்ள மேட்டுக்காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், இப்பகுதி பொதுமக்கள் சுமார் 4 கி.மீ. தொலைவு உள்ள காந்தூர் ரேஷன் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வந்தனர். 
இதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து,  கடந்த 2014-15 -ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் மேட்டுக்காலனி பகுதியில் புதிதாக ரேஷன் கடைக்கான கட்டடம் கட்டப்பட்டது.
இந்த நிலையில், கட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளதால், தொடர்ந்து இப்பகுதி மக்கள் 4 கி.மீ. தொலைவு உள்ள காந்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று வருகின்றனர். எனவே ரேஷன் கடை கட்டடத்தைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT