காஞ்சிபுரம்

லட்சுமி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பட்டாங்குளத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து யாகசாலைப் பூஜைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தன. திங்கள்கிழமை யாகசாலையில் மகாபூர்ணாஹுதி தீபாராதனை முடிந்து புனிதநீர்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர்  லட்சுமி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவினை முன்னிட்டு லட்சுமி விநாயகர் இரவு முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினரும்,கிராம மக்களும் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT