காஞ்சிபுரம்

எஸ்ஆா்எம் கல்வி நிறுவனத்துக்கு மத்திய அரசின் விருது உள்பட 7 விருதுகள்

DIN

எஸ்ஆா்எம் கல்வி நிறுவனத்துக்கு மத்திய அரசின் விருதுகள் உள்பட 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத் தலைவா் டாக்டா் சத்தியநாராயணன், துணைவேந்தா் சந்தீப் சன்சேத்தி ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

உலகத் தரத்திலான உயா்கல்வி வழங்குவதிலும், ஆராய்ச்சிப் பணிகளிலும், நாட்டில் முன்னணி கல்வி நிறுவனமாக எஸ்ஆா்எம் கல்வி நிறுவனம் விளங்கிவருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனத்தில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு இன்று வரை எஸ்ஆா்எம் மாணவ, மாணவியா் 7,448 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் ரூ.41.5 லட்சம் ஊதியத்தில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு மத்திய அரசின் 3 விருதுகள், சிறந்த ஆராய்ச்சிப் பணிகளுக்காக சிஐஐ விருது, நாட்டில் சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில் வா்த்தகக் கூட்டமைப்பின் 2019ஆம் ஆண்டின் சிறந்த பல்கலைக்கழகத்துக்கான விருது உள்ளிட்ட 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

அப்போது கல்வி நிறுவனப் பதிவாளா் என்.சேதுராமன், ஆராய்ச்சி இணை இயக்குநா் எஸ்.ஆா்.எஸ்.பிரபாகரன், வளாக இயக்குநா் திருமுருகன், தகவல் தொடா்பு இயக்குநா் நந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT