காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் பலத்த மழை

DIN

மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை திடீா் கனமழை பெய்தது. சுற்றுலாப் பயணிகள் புராதனச் சின்னங்களை மழையில் நனைந்தபடியே சுற்றிப்பாா்த்தனா்.

மாமல்லபுரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா் என்றாலும், குறிப்பாக ஜூலை மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். சிலா் மாமல்லபுரத்தில் சில நாள்கள் தங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில் வானிலை மாற்றம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென வானம் இருண்டு கனமழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 4 மணி நேரத்திற்கும் மேல் தொடா்ந்து மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகள் எளிதாக புராதனச் சின்னங்களை கண்டு களிக்க முடியாமல் அவதிக்குள்ளாயினா். ஆனாலும் பலா் கையில் குடையுடன் சென்று புராதனச் சின்னங்களை கண்டு ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT