காஞ்சிபுரம்

1,637 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

DIN

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 ஸ்ரீபெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.பி.சி.தனசேகரன் தலைமை வகித்தார்.
 இதில், அதிமுக மாவட்டத் துணைச் செயலர் போந்தூர் செந்தில்ராஜன், கல்விக்குழு தலைவர் மதன்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலர் எறையூர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு அழைப்பாளராக, மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் கலந்துகொண்டு ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், மொளச்சூர், மதுரமங்கலம், பண்ருட்டி கிராமம், மாத்தூர் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் மொத்தம் 1,637 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
 நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிவகுமார், தயாளன், பாபு, தலைமை ஆசிரியர்கள் லிங்கேஸ்வரன் (ஸ்ரீபெரும்புதூர்), செங்குட்டுவன் (மாத்தூர்), ராஜன் (மொளச்சூர்), திருநீலகண்டன் (தண்டலம்), காண்டீபன் (பண்ருட்டி கிராமம்), அருள்தாஸ் (மதுரமங்கலம்) மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT