காஞ்சிபுரம்

மேல்மருவத்தூர் கோயில்களில் ஆடித் திருவிழா

DIN


மேல்மருவத்தூரில் உள்ள கெங்கையம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், துர்கையம்மன்,  முனீஸ்வரன் கோயில்களில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை மங்கல இசை, கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு கெங்கையம்மன் கோயிலுக்கு வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், கருவறை அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது. 
அன்னதானத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். மாலை கும்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT