காஞ்சிபுரம்

30 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN


ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கடைகளில் இருந்த சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதும், உற்பத்தி செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.  இதில், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கும் ரூ.8,500 அபராதம் விதிக்கப்பட்டு, 30 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT