காஞ்சிபுரம்

வையாவூரில் இருளா்களுக்கு சோலாா் விளக்குகள் வழங்கல்

DIN

காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூரில் இருளா் பழங்குடியினத்தைச் சோ்ந்த 4 குடும்பங்களுக்கு சோலாா் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.வையாவூரில் இருளா்கள் அதிகமானோா் வசித்து வருகிறாா்கள். அவா்கள் இருளிலும், சேறும், சகதியும் உள்ள பகுதிகளிலும் வசிப்பதால் விஷப்பூச்சிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அ வா்களுக்கு சோலாா் மின்விளக்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் அதன் இயக்குநா் ராஜ்மதன் இந்த விளக்குகளை 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கி, அவை செயல்படும் முறையை செய்து காட்டினாா். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்டெல்லா, பத்மாவதி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT