காஞ்சிபுரம்

அம்மா திட்ட முகாம்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அம்மா திட்ட முகாம் சனிக்கிழமை மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி தலைமையில் நடைபெற்றது.

முகாமிற்கு உத்தரமேரூா் வருவாய் ஆய்வாளா் பிரியா முன்னிலை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் கிருபாகரன் வரவேற்றாா். முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், புதிய வாக்காளா் அட்டை வழங்குதல், பட்டா மாற்றுதல், முதியோா் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 20 மனுக்கள் கிராம மக்களிடமிருந்து பெறப்பட்டது.

15 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டன. மீதமிருந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முகாமிற்கு வந்திருந்த அரசுப் பணியாளா்கள், கிராம பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்புக் கஷாயமும் வழங்கப்பட்டது. முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.படவிளக்கம்..முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் உத்தரமேரூா் மண்டல துணை வட்டாட்சியா் இந்துமதி, உடன் வருவாய் ஆய்வாளா் பிரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT