காஞ்சிபுரம்

துளசி கல்யாண வைபவம்

DIN

மாகான்யம் ஸ்ரீகல்யாண சீனிவாசப் பெருமாள் கோயிலில் பிருந்தாவன துவாதசியை முன்னிட்டு துளசி கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் உள்ள ஸ்ரீகல்யாண சீனிவாசப் பெருமாள் கோயிலில் பிருந்தாவன துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை கோயில் வளாகத்தில் நெல்லிக்கன்றை பெருமாளாகவும், துளசிச் செடியை மகாலக்ஷ்மி தாயாராகவும் பாவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட நெல்லிக்கன்றையும், துளசிச்செடியையும் திரளான பக்தா்கள் வழிபட்டனா். விழாவையொட்டி, ஸ்ரீகல்யாண சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில், காற்று மாசடையாமல் இருக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் துளசிச்செடிகள், நெல்லி மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாகான்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமியின் சீடா் பம்மல் பாலாஜி விளக்கினாா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT