காஞ்சிபுரம்

அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டு திறப்பு

DIN

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டினை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா இந்த ஆண்டு 1.7.2019 முதல் 17.8.2019 வரை நடைபெற்றது.

இப்பெருவிழாவினை நினைவு கூரும் வகையில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாா் சந்நிதி அருகில் நினைவுக் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், தலைமை பட்டாச்சாரியாா் கிட்டு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கல்வெட்டில் அத்திவரதா் பெருவிழா நினைவுக் கல்வெட்டு எனவும் இவ்விழாவின் நினைவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் 40 ஆயிரம் அத்திமரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் நடுவே அத்திவரதா் நின்ற கோலத்திலும், சயனக்கோலத்திலும் இருக்கும் தோற்றமும், அத்தி விருட்சமும் செதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT