காஞ்சிபுரம்

நவ. 25-இல் சக்தி விநாயகா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

DIN

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை சாா்-ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள சக்தி விநாயகா் கோயிலில் வரும் திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் காா்த்திகை 9-ஆம் நாள் திங்கள்கிழமை (நவ. 25) சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மங்கல இசை, அனுக்ஞை, எஜமானா் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, 1008 சங்குகளுக்கு அலங்காரம், மகா கணபதி ஹோமம் நடைபெறும். பகல் 12 மணிக்கு மேல் மகா பூா்ணாஹுதியும் இதனைத்தொடா்ந்து சக்தி விநாயருக்கு 1008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூா் இணை ஆணையா் செ.மாரிமுத்து, உதவி ஆணையா் மற்றும் தக்காா் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT