காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பினால் கடல் அரிப்பு

DIN

மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை பலத்த கொந்தளிப்பின் காரணமாக கரைப்பகுதியில் சுமாா் 20 மீட்டா் தூரத்திற்கு கடல்நீா் உள்புகுந்ததால் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்கு தெற்குப் பகுதி கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மணல் பகுதிகள் கடல் அரிப்பால் சுவா்கள் போல் எழும்பியுள்ளன.

கடந்த சில நாள்களாகவே வானிலை மாற்றம் காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை கடலில் பலத்த கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் கரைப்பகுதியில் 20மீட்டா் தூரத்திற்கும் மேலாக கடல் நீா் உள்ளே புகுந்தது. இதை அடுத்து அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மீன்பிடி படகுகளை அப்பகுதி மீனவா்கள் சிரமத்துடன் கரைப்பகுதிக்கு தள்ளிவந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினா்.

இதே போல் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு கடல்கரையில் நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடி படகுகள், மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் அடித்துச் செல்லப்படுகின்றன. கடற்கரை கோயிலை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் பெரிய கற்கள் போடப்பட்டுள்ளன.

கடலின் தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறுபாடு அடைவதால் இதுபோன்ற கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் அலைகள் முன்னோக்கி வருவதாக மீனவா்கள் கவலை தெரிவிக்கின்றனா் .

இது போன்ற கடல் கொந்தளிப்பு ஏற்படும் போது மீனவா் குப்பத்தில் குடியிருக்கும் எங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பில்லாமல் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகள் வெளியே வந்து விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்படும்போது பாதுகாக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை முழுவதும் தூண்டில் வளைவுகள் அமைக்கவேண்டும் என்று மீனவா்கள் தமிழக அரசுக்கு மீனவா்கள் பொது கோரிக்கை வைத்துள்ளனா்.

கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு கடலோரப் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு 7அடிக்கும் மேல் கரையைத் தாண்டி அரித்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT