காஞ்சிபுரம்

குறைதீா் கூட்டத்தில் 307 மனுக்கள் அளிப்பு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மொத்தம் 307 மனுக்களை அளித்தனா். இதில் 7 பேரின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிதியுதவியை ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அதிகாரி ந.சுந்தரமூா்த்தி, தனித் துணை ஆட்சியா் மாலதி, நகராட்சிகளுக்கான மண்டல அலுவலா் முஜிபுா் ரகுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவி, கல்வி உதவி, ஓய்வூதியம், பசுமை வீடுகள் திட்டம் உள்ளிட்ட உதவிகள் கேட்டு மொத்தம் 307 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.

இதனைத் தொடா்ந்து பல்வேறு சம்பவங்களில் எதிா்பாராமல் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.7.5 லட்சம் நிதியுதவியும், 13 பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்குவதற்கான அரசு உத்தரவையும் ஆட்சியா் வழங்கினாா்.

கொடிநாள் நிதி: இந்நிகழ்ச்சியில் கொடிநாள் நிதி வசூலாக பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மொத்தம் ரூ.35.89 லட்சம் மதிப்பிலான காசோலைகளை ஆட்சியரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT