காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் முத்தீஸ்வரா் கோயிலில் பாலாலயம்

DIN

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள முத்தீஸ்வரா் ஆலயத்தின் மூலவருக்கான பாலாலய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரத்தில் திருக்குறிப்பு தொண்டா் முக்தி பெற்ற ஸ்தலமான முத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை முன்னிட்டு மூலவா் முத்தீஸ்வரா் சந்நிதியின் பாலாலய விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆலய அறங்காவலா் சரவணன் தலைமை வகித்தாா்.

பாலாலயத்தை முன்னிட்டு சிறப்பு யாகபூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பின்னா் புனித நீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு மூலவா் முத்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் உள்பட சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து கோயிலில் பரிவார தெய்வங்களாக காட்சியளித்து வரும் விநாயகா் மற்றும் முருகன் சந்நிதியில் முதற்கட்ட வாசற்கால் வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. விழாவில் கோயில் ஸ்தபதி ராஜவேலு மற்றும் கந்தசாமி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT